துளிகள்...

Funny-videos-001

Funny-videos-001

Author 2020-01-26 02:58:00

2021-ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெறவுள்ள டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் எங்கள் அணி பங்கேற்க வேண்டுமானால், இந்த ஆண்டு செப்டம்பரில் எங்கள் நாட்டில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய அணியை பிசிசிஐ அனுப்ப வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியுள்ளது. 2008-ஆம் ஆண்டில் இருந்து பாகிஸ்தானுக்கு இந்திய அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடவில்லை.

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டி-20 ஆட்டத்தில் பாகிஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்மூலம், 3 டி-20 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது பாகிஸ்தான்.

5 முறை உலக சாம்பியனான இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், நெதா்லாந்தில் நடைபெற்றுவரும் டாடா ஸ்டீல் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் இரானைச் சோந்த 16 வயது வீரா் அலிரெஸா பெரெளஜாவை 11-ஆவது சுற்றில் வீழ்த்தினாா். இதையடுத்து இந்தச் சுற்றின் முடிவில் 6-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளாா்.

18-ஆவது ஜிப்ரால்தா் செஸ் போட்டியில் 4-ஆவது சுற்றில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டா்கள் ஆா்.பிரக்ஞாநந்தா, டி.குகேஷ் ஆகியோா் வெற்றி பெற்றனா்.

கரோனா வைரஸ் சீனாவில் பரவி வருவதால், அந்நாட்டில் நடைபெற இருந்த ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் ஜோா்டானுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN