தென்னாப்பிரிக்கா தொடர்: ரிஷப் பண்ட் வெளியே சாஹா உள்ளே!

TIMES NOW

TIMES NOW

Author 2019-10-01 15:22:00

img

விசாகப்பட்டினம்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான டி-20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமன் ஆனது. அதனை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. விசாகப்பட்டினத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை தொடரில் இருந்து ரிஷப் பண்ட் சற்று சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் அவருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதனால் தற்போது அணியில் அவருக்கு பதில் சாஹாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த 3 போட்டி கொண்ட தொடர் முழுவதும் அவரே அணியின் விக்கெட் கீப்பராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஸ்குவாட்டில் இருந்தபோதும், 3 வேகப்பந்து வீச்சாளர்களோடு இந்திய அணி களம் இறங்கியதால் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்நிலையில் முதல் டெஸ்டில் இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி என 2 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குவதால் அஸ்வினுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் ரோஹித் ஷர்மா மீது அதிக எதிர்ப்பரப்பு உள்ளது. கே.எல்.ராகுல் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

டி-20, மற்றும் ஒருநாள் போட்டியில் ஓப்பனராக களம் இறங்கும் ரோஹித் ஷர்மாவுக்கு டெஸ்டிலும் ஓப்பனராக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனை பற்றி பேட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில், டெஸ்டில் ரோஹித் நிரூபிக்க அவருக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் அவர் ஓப்பனராக நிரூபிக்க எந்த வித அவசரமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD