தென்னாப்பிரிக்க வீரரை இடித்த கோலி - ஐசிசி கண்டனம்

Puthiyathalaimurai

Puthiyathalaimurai

Author 2019-09-24 22:04:48

img

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது ஐசிசி விதிமுறைகளை மீறியதற்காக விராட் கோலிக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்திய அணியின் பேட்டிங்கின் போது 5வது ஓவரை தென் ஆப்பிரிக்கா அணியின் பியூரன் ஹென்ட்ரிக்ஸ் வீசினார். அந்த ஓவரில் ரன் எடுக்கும் போது இந்திய கேப்டன் விராட் கோலி வழியில் நின்று கொண்டிருந்த ஹெண்ட்ரிக்ஸ் கையில் இடித்துள்ளார். இதற்கு ஐசிசி தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.

img

இது தொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், “விராட் கோலி வீரர்களுக்கான ஐசிசி விதி 2.12ஐ மீறியுள்ளார். அதாவது ஆட்டத்தின் போது மற்ற வீரர்களுடனோ அல்லது நடுவர் இடமோ தேவையில்லாமல் உடல் ரீதியாக தொடவோ அடிக்கவோ கூடாது என்ற விதியை மீறியுள்ளார். இந்த விதி மீறலை கோலி ஒப்புக் கொண்டுள்ளார். எனவே அவருக்கு ஐசிசி கண்டனம் தெரிவிப்பது உடன் ஒரு ஒழுங்குமுறை மதிப்பிழப்பு புள்ளியையும் (demerit point)அளித்துள்ளது.

img

விராட் கோலி ஏற்கெனவே இரண்டு ஒழுங்குமுறை மதிப்பிழப்பு புள்ளிகளை வைத்திருக்கிறார். 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்காவுடன் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது ஒரு மதிப்பிழப்பு புள்ளியை பெற்றார். அதற்கு பிறகு 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கோலி மற்றொரு புள்ளியை பெற்று இருந்தார். ஆகவே இது அவர் பெரும் மூன்றாவது குறைபாடு புள்ளியாகும்” எனத் தெரிவித்துள்ளது.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN