தேறுமா தென் ஆப்ரிக்கா

Indian News

Indian News

Author 2019-09-29 12:30:00

img

டிவிலியர்ஸ், ஆம்லா என அனுபவ வீரர்கள் இல்லாத நிலையில் வரும் டெஸ்ட் தொடரில் தென் ஆப்ரிக்க அணி தேறுமா என சந்தேகம் எழுந்துள்ளது.இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் வரும் அக். 2ல் விசாகப்பட்டனத்தில் துவங்குகிறது. இந்த அணிக்கு முதுகெலும்பாக இருந்தவர்கள் டிவிலியர்ஸ், ஆம்லா. ஆசிய துணைக்கண்டத்தில் சுழற்பந்து வீச்சை எளிதாக சமாளிப்பர்.இதில் டிவிலியர்ஸ் சராசரி 54.56, ஆம்லா சராசரி 47.66 ரன்னாக உள்ளது. இந்த இருவரும் இல்லாமல் முதன் முறையாக ஆசிய மண்ணுக்கு வந்துள்ளது தென் ஆப்ரிக்கா. தற்போதுள்ள அணியில் டுபிளசி (58 டெஸ்ட்), எல்கர் (56), குயின்டன் டி காக் (40), பவுமா (36), மார்க்ரம் (17) என இந்தியா வந்துள்ள பலரும் டெஸ்டில் அனுபவம் வாய்ந்தவர்கள் தான் என்றாலும், ஆசிய மண்ணில் இவர்களது சராசரி மோசமாகத் தான் உள்ளது. இந்தியாவுக்கு எதிராக சொந்தமண்ணில் இவர்கள் எப்படி செயல்பட போகின்றனர் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD