தொடரை கைப்பற்றியது விண்டீஸ்

Indian News

Indian News

Author 2019-11-10 03:42:49

img

லக்னோ: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் அசத்திய விண்டீஸ் அணி 47 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து 2-0 என, தொடரை கைப்பற்றியது.

இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான், விண்டீஸ் அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் விண்டீஸ் வென்றது. லக்னோவில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் 'டாஸ்' வென்ற ஆப்கானிஸ்தான் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.

விண்டீஸ் அணிக்கு ஷாய் ஹோப் (43), எவின் லீவிஸ் (54) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. ஷிம்ரன் ஹெட்மயர் (34) ஆறுதல் தந்தார். ராஸ்டன் சேஸ் (9) ஏமாற்றினார். அபாரமாக ஆடிய நிக்கோலஸ் பூரன் (67) அரைசதம் கடந்து கைகொடுக்க, விண்டீஸ் அணி 50 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்தது.

ஆப்கானிஸ்தான் சார்பில் நவீன்-உல்-ஹக் 3 விக்கெட் வீழ்த்தினார்.

நஜிபுல்லா ஆறுதல்: சவாலான இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் அணிக்கு நஜிபுல்லா ஜத்ரன் (56) ஆறுதல் தந்தார். ஹஜ்ரதுல்லா ஜஜாய் (23), ரஹ்மத் ஷா (33), முகமது நபி (32) பெரிய அளவில் சோபிக்கவில்லை. கேப்டன் ரஷித் கான் (2) ஏமாற்றினார்.

ஆப்கானிஸ்தான் அணி 45.4 ஓவரில், 200 ரன்களுக்கு 'ஆல்-அவுட்டாகி' தோல்வியடைந்தது. விண்டீஸ் சார்பில் காட்ரெல், ராஸ்டன் சேஸ், ஹைடன் வால்ஷ் தலா 3 விக்கெட் கைப்பற்றினர். மூன்றாவது போட்டி லக்னோவில் நவ. 11ல் நடக்கவுள்ளது.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN