தொடர்ச்சியாக 5-வது வெற்றியை பெற்ற தமிழக அணி

Indian News

Indian News

Author 2019-10-07 00:36:54

img

விஜய் ஹசாரே கோப்பைக்கான போட்டியில் தமிழக அணி நேற்று முன்தினம் தனது 5-வது லீக்கில் ஜம்மு-காஷ்மீர் அணியை ஜெய்ப்பூரில் எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த ஜம்மு-காஷ்மீர் அணி 9 விக்கெட்டுக்கு 238 ரன்கள் எடுத்தது. 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழக அணி 48 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 239 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முரளிவிஜய் 117 ரன்களும் (131 பந்து, 14 பவுண்டரி), பாபா அபராஜித் 86 ரன்களும் (நாட்-அவுட்) விளாசினர். தோல்வி பக்கமே செல்லாத தமிழக அணி தொடர்ச்சியாக 5-வது வெற்றியை பெற்றது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD