தொடர்ச்சியாக 6 முறை 50 ரன்னுக்கு மேல் ரோஹித்

Indian News

Indian News

Author 2019-10-03 09:15:07

img

இந்தியா – தென் ஆப்ரிக்கா முதல் டெஸ்ட் போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி தொடக்க வீரராக முதன் முறையாக ரோகித் ஷர்மா களமிறங்கினர். இவர் 115 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருக்கிறார். மேலும் டெஸ்ட் அரங்கில் துவக்க வீரராக களமிறங்கிய முதல் இன்னிங்சில் சதம் கடந்த 4வது இந்திய வீரரானார்.

ஏற்கனவே ஷிகர் தவான் 187 ரன்கள், லோகேஷ் ராகுல் 110 ரன்கள், பிரித்வி ஷா 134 ரன்கள் ஆகியோர் இந்த பட்டியலில் இருக்கிறார்கள். இந்திய மண்ணில் பங்கேற்ற டெஸ்டில் தொடர்ச்சியாக 6 முறை 50 ரன்னுக்கு மேல் (82, 51*, 102*, 65, 50*, 115* ) எடுத்துள்ளார்.

ஏற்கனவே விண்டீசின் எவர்டன் வீக்ஸ், இந்தியாவின் ராகுல் டிராவிட், ஜிம்பாப்வேயின் ஆன்டி பிளவர் ஆகியோர் இந்த பட்டியலில் இருக்கிறார்கள்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN