தொலைக்காட்சி வர்ணனையாளராக தோனி? வெளியான தகவல்.!

Indian News

Indian News

Author 2019-11-06 14:37:45

img

இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வருகிற 22 ஆம் தேதி தொடங்குகிறது.

இந்தியாவில் முதன் முதலாக நடைபெறும் பகல்-இரவு டெஸ்ட் போட்டி இதுவாகும். இந்த வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

பகல் இரவு ஆட்டத்தில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்களாக இருந்த அனைவரையும் போட்டியின் வர்ணனையாளர் அறைக்கு அழைத்து வர முடிவு செய்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம்.

இதற்காக அனுமதி கேட்டு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இ-மெயில் அனுப்பி இருக்கிறது.

முன்னாள் டெஸ்ட் கேப்டன்களின் போட்டி அனுபவம் குறித்து கேட்டு ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு எந்த கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்காமல் ஒதுங்கி இருக்கும் தோனியை கவுரவ வர்ணனையாளராக கலந்து கொள்ளுமாறு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அழைப்பு விடுத்து இருக்கிறது.

இதனால் தோனிவர்ணனையாளர் குழுவில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD