தோனிக்கு யுவராஜ் ஆதரவு

Indian News

Indian News

Author 2019-09-25 02:17:19

img

புதுடில்லி: ''தோனி எதிர்காலம் குறித்து விவாதிப்பது சரியான செயல் அல்ல. அதை அவரிடமே விட்டுவிட வேண்டும்,'' என யுவராஜ் சிங் தெரிவித்தார்.

இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி 38. இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை தொடருக்குப் பின் இவரது ஓய்வு குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகின்றன. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் 'ஆல் ரவுண்டர்' யுவராஜ் சிங் கூறியது:

இந்தியாவுக்கு இரு உலக கோப்பை வென்று தந்த வெற்றிகரமான கேப்டன் தோனி. இந்திய கிரிக்கெட்டுக்காக நிறைய சாதித்துள்ளார். இவரது ஓய்வு குறித்து விவாதிப்பது சரியான செயல் அல்ல. இதுகுறித்து முடிவெடுக்க தோனிக்கு கால அவகாசம் தர வேண்டும்.

மீண்டும் விளையாட விரும்பினால், அவரது முடிவுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். இவரது இடத்தை நிரப்ப நீண்ட காலம் தேவைப்படும்.

ரிஷாப் பன்டுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. தேவையற்ற முறையில் அதிகமான விமர்சனங்களை எதிர்கொள்கிறார். பயிற்சியாளர், கேப்டன் கோஹ்லி ஆலோசனை தந்து, இதில் இருந்து மீண்டு வர உதவ வேண்டும்.

அவரது குணத்தை புரிந்து கொண்டு முழுத்திறமையை வெளியே கொண்டு வந்தால் நல்லது. இதை செய்யத் தவறினால் சிறந்த இன்னிங்சை அவரிடம் எதிர்பார்க்க முடியாது.

இவ்வாறு யுவராஜ் சிங் கூறினார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD