தோனி ஓய்வு எப்போ: சொல்கிறார் தவான்

Indian News

Indian News

Author 2019-09-29 05:10:36

img

புதுடில்லி: ''இந்திய அணிக்காக பல முக்கியமான முடிவுகளை தோனி எடுத்துள்ளார். ஓய்வு குறித்தும் இவர்தான் முடிவு எடுக்க வேண்டும்,'' என, ஷிகர் தவான் தெரிவித்தார்.இந்திய அணியின் சீனியர் வீரர் தோனி, 38. சமீப காலமாக 'பார்மில்' இல்லை. ராணுவ சேவையில் ஈடுபட்டதால் விண்டீஸ் தொடரில் பங்கேற்கவில்லை. தென் ஆப்ரிக்க 'டுவென்டி-20' தொடரிலும் விளையாடவில்லை. இவர் விரைவில் ஓய்வு பெறுவார் எனத் தெரிகிறது.இது குறித்து இந்திய அணி வீரர் ஷிகர் தவான் கூறுகையில்,'' தோனி பல ஆண்டுகளாக விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக பல முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளார். தனது ஓய்வு குறித்தும் இவர்தான் முடிவு எடுக்க வேண்டும்.

தனது ஓய்வு குறித்தும் இவர்தான் முடிவு எடுக்க வேண்டும். எப்போது கிரிக்கெட்டிற்கு விடை தர வேண்டும் என்பதை இவர் மட்டுமே அறிவார். அணியில் ஒவ்வொரு வீரர் குறித்தும் துல்லியமாக தெரிந்து வைத்திருப்பார். சாம்பியன் வீரரை எப்படி உருவாக்க வேண்டும் என்பதும் தெரியும்.

விராத் கோஹ்லி இளம் வீரராக இருந்தபோதும், தோனி ஆலோசனைகள் வழங்கினார். தற்போது கேப்டனாக மாறியபின்பும் உதவுகிறார். இந்த காரணத்தால், தற்போது வரை இவருக்கு கோஹ்லி நன்றியுடன் உள்ளார். ரிஷாப் திறமையான வீரர். சில போட்டிகளில் ரன்கள் எடுக்க தடுமாறுவோம். அப்படிப்பட்ட தருணங்களிலிருந்து பாடம் கற்றுக்கொண்டால், நிச்சயமாக மீண்டு வரலாம்,'' என்றார்.

இந்திய சுழற்பந்துவீச்சாளர் சகால் கூறுகையில்,'' இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துடன் மோதினோம். இதுதான், நான் பங்கேற்ற முதல் உலக கோப்பை தொடர் என்பதால் எதிர்பார்ப்புடன் இருந்தேன். மழையால் பாதிக்கப்பட்ட அரையிறுதியில் முக்கியமான கட்டத்தில் அனுபவ வீரர் தோனி ஆட்டமிழந்தார். அடுத்த வீரராக நான் களமிறங்கினேன். தோனி அவுட்டான சோகத்தில் அழுதுவிட்டேன். இதை மறைத்து களமிறங்க மிகவும் போராடினேன். 9 லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி விட்டு, திடீரென தோல்வியடைந்தது அதிர்ச்சியாக இருந்தது. போட்டி முடிந்ததும், விரைவாக மைதானத்திலிருந்து கிளம்பி ஓட்டலுக்கு சென்றது அதுவே முதல் முறை,'' என்றார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD