தோனி விளையாடாமல் இருப்பதற்கு இதுதான் காரணமா...?

Puthiyathalaimurai

Puthiyathalaimurai

Author 2019-09-28 23:45:48

img

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய விக்கெட் கீப்பருமான தோனி உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ராணுவத்திற்கு பயிற்சிக்கு செல்வதாக கூறி இரண்டு மாதம் ஓய்வு எடுத்துக் கொண்டார். சரி அப்போது காரணம் என்று ஒன்று சொல்லப்பட்டது. அதுவும் அவர் வெளிப்படையாக பேட்டி எதுவும் கொடுக்கவில்லை. ராணுவ உடையுடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் மட்டுமே வெளியாகியது.

ராணுவத்தில் இருந்து திரும்பிய பிறகும் இந்திய அணியில் தோனி விளையாடவில்லை. தென்னாப்ரிக்க டி20 தொடரில் தோனிக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. டெஸ்ட் போட்டியில் இருந்து ஏற்கனவே அவர் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் விளையாடிவருகிறார். டி20 போட்டியில் தோனிக்கு வாய்ப்பு கொடுக்கும் எண்ணம் பிசிசிஐக்கு இல்லை என்றே தெரிகிறது. தோனியும் தன்னுடைய ஓய்வு முடிவையோ ? அல்லது அவரது நிலைப்பாட்டினையோ இன்னும் தெரிவிக்கவில்லை.

img

இந்த ஆண்டில் அடுத்ததாக பங்களாதேஷ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான தொடர் உள்ளது. பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் தோனி பங்கேற்க போவதில்லை. தொடர்ச்சியாக நவம்பர் மாதம் அவர் விடுப்பில் இருப்பார் என செய்திகள் வெளியாகியுள்ளது. இருப்பினும், தோனி தொடர்ந்து விளையாடாமல் இருப்பதற்கான காரணங்கள் தெளிவுபெறவில்லை. அதனால், பல காரணங்கள் பலரால் யூகிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த ஆண்டு உலகக் கோப்பை டி20 தொடர் வரவுள்ளதாக புதிய விக்கெட் கீப்பரை தயார் செய்ய வேண்டும் என்பதால் ரிஷப் பண்டிற்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. தோனியும் இதற்கு ஒத்துக் கொண்டு அதற்கேற்க தன்னுடைய முடிவை பொருத்திருந்து அறிவிப்பார் என்ற தகவலும் வெளியானது.

img

இப்படியிருக்கையில், தோனி விளையாடாமல் இருப்பது மற்றொரு காரணமும் தற்போது வெளியாகியுள்ளது. ஐபிஎல் மற்றும் உலகக் கோப்பை தொடர்களின் போது தோனியின் முதுகு பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அந்த காயங்கள் இன்னும் சரியாகவில்லை என்றும் அதனால்தான் நவம்பர் வரை அவர் ஓய்வில் இருக்கிறார் என்ற தகவல்தான் அது. என்ன இருந்தாலும் காரணங்கள் எதுவும் இன்னும் வெளிப்படையாக தெரியவில்லை.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN