நான்கு ஆண்டுகள் கழித்து டக் அவுட் ஆனா ஆஷஸ் ஹீரோ

Indian News

Indian News

Author 2019-10-12 01:53:51

ஸ்மித் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களைப் பிரித்தெடுத்தார். ஸ்மித் ஆடியது 5 இன்னிங்ஸ் 774 ரன்கள் அதில் இரண்டு சதங்கள், ஒரு இரட்டை சதம், மூன்று அரைசதங்கள். ஆஷஸ் தொடருக்குப் பின்னர் ஆஸ்திரேலியாவின் உள்ளூர் தொடரான ‘ஷெஃபீல்ட் ஷீல்ட்’ தொடர் நேற்று தொடங்கியது. ஆறு அணிகள் பங்கேற்கும் அந்தத் தொடரில், ஸ்மித் நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.

குயின்ஸ்லாந்து அணிக்கெதிரான போட்டியில் ஸ்மித் பேட்டிங் வந்ததும், ஆஷஸ் தொடர்தான் கண்முன் தோன்றியது. ஆனால் வைட் ஆப்சைடில் கேமரூன் கேனன் வீசிய பந்தை, ஸ்மித் விடவில்லை, பேக்புட் டிரைவ் ஆடினார். பந்து எட்ஜ் எடுத்து இரண்டாவது ஸ்லிப் ஜோ ஃபர்ன்ஸிடம் சிக்கியது. ஸ்மித் டக் அவுட். தான் சந்தித்த 5வது பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார் ஸ்மித். இதற்கு முன் கடந்த 2016ஆம் ஆண்டு பெர்த் மைதானத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்டில் டக்-அவுட் ஆகியிருந்தார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD