நியூசி.,யிடம் வீழ்ந்தது இங்கிலாந்து

Indian News

Indian News

Author 2019-11-03 23:40:44

img

வெலிங்டன்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது 'டுவென்டி-20' போட்டியில் நீசம், சான்ட்னர் அசத்த நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து சென்றுள்ள இங்கிலாந்து அணி ஐந்து 'டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வென்றது. இரண்டாவது போட்டி வெலிங்டனில் நடந்தது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.

நீசம் விளாசல்

நியூசிலாந்து அணிக்கு மன்ரோ (7) ஏமாற்றினார். கப்டில் 28 பந்தில் 41 ரன்கள் விளாசினார். கிராண்ட்ஹோம், ராஸ் டெய்லர் தலா 28 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

நீசம் 42 ரன் விளாசினார். ஜோர்டான் 'வேகத்தில்' சான்ட்னர் டக் அவுட்டானார். நியூசிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜோர்டான் 3 விக்கெட் வீழ்த்தினார்.

சான்ட்னர் நெருக்கடி

இங்கிலாந்து அணிக்கு பேர்ஸ்டோவ் (0), வின்சி (1) மோசமான துவக்கம் தந்தனர். டேவிட் மாலன் (39), கேப்டன் மார்கன் (32) நம்பிக்கை அளித்தனர். சான்ட்னர் 'சுழலில்' சாம் கர்ரான் (9) சிக்கினார். ஜோர்டான் 36 ரன்கள் எடுத்து ஆறுதல் தந்தார். இங்கிலாந்து அணி 19.5 ஓவரில் 155 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வீழ்ந்தது. நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக சான்ட்னர் 3 விக்கெட் கைப்பற்றினார்.

இரு அணிகள் மோதும் மூன்றாவது போட்டி 5ம் தேதி நெல்சனில் நடக்கவுள்ளது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD