நியூசி.,யை வீழ்த்தியது இங்கிலாந்து

Indian News

Indian News

Author 2019-11-02 19:40:48

img

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் 'டுவென்டி-20' போட்டியில் ஜேம்ஸ் வின்ஸ் அரைசதம் கடந்து கைகொடுக்க இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து சென்றுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட சர்வதேச 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி கிறைஸ்ட்சர்ச் நகரில் நடந்தது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மார்கன் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

நியூசிலாந்து அணிக்கு மார்டின் கப்டில் (2) ஏமாற்றினார். கிறிஸ் ஜோர்டான் 'வேகத்தில்' கோலின் முன்ரோ (21), டிம் செய்பெர்ட் (32) வெளியேறினர்.

அடில் ரஷித் 'சுழலில்' கோலின் டி கிராண்ட்ஹோம் (19) சிக்கினார். பொறுப்பாக ஆடிய ராஸ் டெய்லர் (44) ஓரளவு கைகொடுத்தார்.

நியூசிலாந்து அணி 20 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்தது. டேரில் மிட்செல் (30), மிட்செல் சான்ட்னர் (1) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் ஜோர்டான் 2 விக்கெட் வீழ்த்தினார்.

வின்ஸ் விளாசல்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு டேவிட் மாலன் (11) சுமாரான துவக்கம் தந்தார். மற்றொரு துவக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவ் (35) ஆறுதல் தந்தார். அபாரமாக ஆடிய ஜேம்ஸ் வின்ஸ் (59) அரைசதம் கடந்து நம்பிக்கை அளித்தார்.

இங்கிலாந்து அணி 18.3 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் மார்கன் (34), சாம் பில்லிங்ஸ் (14) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து சார்பில் மிட்சல் சான்ட்னர் 3 விக்கெட் கைப்பற்றினார். ஆட்ட நாயகன் விருதை வின்ஸ் (இங்கிலாந்து) வென்றார்.

இதனையடுத்து தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என, முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி நவ. 3ல் வெலிங்டனில் நடக்கவுள்ளது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD