நேபாள வீரர் சாதனை

Indian News

Indian News

Author 2019-09-29 11:30:00

img

சிங்கப்பூர்: நேபாள வீரர் பராஸ் கட்கா, சர்வதேச 'டுவென்டி-20' போட்டிகளில், 'சேசிங்கில்' சதம் அடித்த முதல் கேப்டன் என்ற உலக சாதனை படைத்தார்.சிங்கப்பூர் மண்ணில் நேபாளம், சிங்கப்பூர், ஜிம்பாப்வே அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு 'டுவென்டி-20' தொடர் நடக்கிறது. இதன் இரண்டாவது லீக் போட்டியில் நேபாளம், சிங்கப்பூர் அணிகள் மோதின. 'டாஸ்' வென்று, பேட்டிங் செய்த சிங்கப்பூர் அணிக்கு ரோகன் (6) ஏமாற்றினார். சுரேந்திரன் 35 ரன்கள் எடுத்தார். கேப்டன் டிம் டேவிட் அரை சதம் விளாச, சிங்கப்பூர் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. டேவிட் (64), ஜனாக் (25) அவுட்டாகாமல் இருந்தனர்.அசத்தல் ஆட்டம்எளிய இலக்கை விரட்டிய நேபாள அணிக்கு இஷான் (5) ஒற்றை இலக்கில் திரும்பினார். கேப்டன் பராஸ் கட்கா, ஆரிப் ஜோடி அசத்தியது. எதிரணி பந்துவீச்சை வெளுத்துவாங்கிய பராஸ் 49வது பந்தில் சதம் அடித்தார். நேபாள அணி 16 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசதத்தில் வெற்றி பெற்றது. பராஸ் (106 ரன், 52 பந்து, 7 பவுண்டரி, 9 சிக்சர்), ஆரிப் (39) அவுட்டாகாமல் இருந்தனர்.கோஹ்லியை முந்தினார்இப்போட்டியில் மிரட்டிய, பராஸ் 'டுவென்டி-20' அரங்கில் 'சேசிங்கில்' சதம் அடித்த முதல் கேப்டன் என்ற உலக சாதனை படைத்தார்.

இதற்கு முன், நெதர்லாந்து கேப்டன் பீட்டர் சீலர் (எதிர்- ஸ்காட்லாந்து, 2019) 96 ரன்கள் எடுத்ததே அதிகபட்சம். இப்பட்டியலில், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் நான்காவது இடத்தில் (எதிர்- இங்கிலாந்து, 90 ரன்கள், 2015) உள்ளார். இந்திய கேப்டன் கோஹ்லி (எதிர்- இலங்கை, 82 ரன்கள், 2017) 8வது இடம் வகிக்கிறார்.முதல் வீரர்'டுவென்டி-20' அரங்கில் சதம் அடித்த முதல் நேபாள வீரர் என்ற பெருமை பெற்றார் பராஸ். இதற்கு முன், மலேசியாவுக்கு எதிராக இவர் 86 ரன்கள் (எதிர்- மலேசியா, 2019) சேர்த்ததே அதிகம்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD