பகலிரவு டெஸ்ட்: கோஹ்லி சம்மதம்

Indian News

Indian News

Author 2019-10-26 05:40:34

img

கோல்கட்டா: ''இந்தியாவில் பகலிரவு டெஸ்ட் போட்டி நடத்த கேப்டன் கோஹ்லி சம்மதம் தெரிவித்தார்,'' என பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலி தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் நடத்தப்படுகிறது. இந்தியாவில் இதுபோல நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக துலீப் டிராபி தொடரில் 'பிங்க்' நிற (இளம் சிகப்பு) பந்து பயன்படுத்தப்பட்டது.

பின் இம்முயற்சி கைவிடப்பட்டது. இதனால் இந்தியாவில் இப்போதைக்கு பகலிரவு டெஸ்ட் நடக்காது என்றனர். இதனிடையே இந்திய கிரிக்கெட் போர்டு தலைவர் கங்குலி, கேப்டன் கோஹ்லி சந்தித்தனர்.

இதுகுறித்து கங்குலி கூறுகையில்,'பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு எப்போதும் எனது ஆதரவு உண்டு.

மக்கள் தங்களது வேலைகளை முடித்து விட்டு, சாம்பியன் வீரர்கள் விளையாடும் போட்டிகளை காண வருவர். டெஸ்ட் கிரிக்கெட்டை இப்படித் தான் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என நம்புகிறேன். கோஹ்லி இதற்கு சம்மதம் தெரிவித்தார். மற்றபடி 'மறுப்பு' என வெளியான செய்திகளில் உண்மை இல்லை. இப்போட்டி எப்போது நடக்கும் எனத் தெரியாது. ஆனால் எப்படியும் நடக்கும்,'' என்றார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD