பயிற்சியில் ரோகித் சர்மா காயம்

Indian News

Indian News

Author 2019-11-02 19:40:48

img

டில்லி: வலை பயிற்சியின் போது பந்து தாக்கியதில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இடது அடிவயிற்று பகுதியில் காயமடைந்தார்.

இந்தியா வந்துள்ள வங்கதேச அணி, மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது. இத்தொடருக்கான இந்திய அணியின் 'ரெகுலர்' கேப்டன் விராத் கோஹ்லி, விருப்ப ஓய்வு பெற்றதால் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முதல் போட்டி நவ. 3ல் டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் நடக்கவுள்ளது.

இப்போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய வீரர்கள் வலை பயிற்சி மேற்கொண்டனர். வங்கதேசத்தின் முஸ்தபிஜுர் ரஹ்மான் பந்துவீச்சை சமாளிப்பதற்காக இலங்கையின் நுவான் அழைக்கப்பட்டுள்ளார்.

இவர் வீசிய பந்து ரோகித் சர்மாவின் இடது பக்க அடிவயிற்று பகுதியில் தாக்கியது. இதனால் லேசான காயமடைந்த இவர், உடனடியாக பயிற்சியில் இருந்து வெளியேறி சிகிச்சை மேற்கொண்டார். இவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இவர் முழுஉடற்தகுதியுடன் இருப்பதாகவும், முதல் போட்டியில் விளையாடுவதில் எவ்வித சிக்கலும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD