பயிற்சி ஆட்டத்தில் தென்ஆப்ரிக்க அணி 199/4

Indian News

Indian News

Author 2019-09-27 22:31:53

img

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள நிலையில், இந்த தொடரின் முதல் போட்டி, வரும் அக்டோபர் 2-ந்தேதி தொடங்குகிறது.

இதற்கு முன் தென்ஆப்பிரிக்கா – இந்தியன் போர்டு பிரசிடென்ட் லெவன் அணிகளுக்கு இடையிலான மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் நேற்று தொடங்கியது. ஆனால் தழை காரணமாக முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடர்ந்து தென்ஆப்ரிக்க அணியின் தொடக்க ஆட்டகாரராக மார்கிராம், டீன் எல்கர் ஆகியொர் களம் இறங்கினர்.

இதில் எல்கர் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டி ப்ரூயின் 6 ரன்னிலும், ஹம்சா 22 ரன்னிலும் வெளியேறினர். 4-வது விக்கெட்டுக்கு மார்கிராம் உடன் பவுமா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நிதானமான ஆடி சதமடித்த மார்கிராம் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார்.

அடுத்து வந்த கேப்டன் டு பிளிசிஸ் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அத்துடன் இன்றைய 2-வது நாள் ஆட்டம் முடிவு பெற்றது. பவுமா 55 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் இருந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென்ஆப்ரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்துள்ளது.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN