பவுலர்கள் தந்த வெற்றி: ஹர்மன்பிரீத் பாராட்டு

Indian News

Indian News

Author 2019-09-26 02:52:19

img

சூரத்: ''தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதலாவது 'டுவென்டி-20' போட்டியில் சிறப்பாக செயல்பட்ட பவுலர்கள் வெற்றி தேடித்தந்தனர்,'' என, இந்திய பெண்கள் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க பெண்கள் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (43), மந்தனா (21) நம்பிக்கை அளித்தனர். பவுலிங்கில் தீப்தி சர்மா (3 விக்கெட்), ஷிகா பாண்டே (2), பூணம் யாதவ் (2), ராதா யாதவ் (2) கைகொடுத்தனர்.

இரண்டாவது போட்டி சூரத்தில் இன்று நடக்கவுள்ளது.

இதுகுறித்து இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறியது: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரை வெற்றியுடன் துவக்கியது மகிழ்ச்சி. இப்போட்டியில் எங்களது 'பேட்டிங்' திருப்தி அளிக்கவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் சிறிது நெருக்கடியுடன் இருந்தேன். பின், பவுலிங்கில் திட்டமிட்டபடி சிறப்பாக செயல்பட்டதால் வெற்றி பெற முடிந்தது. இந்த வெற்றிக்கு பவுலர்கள் முக்கிய பங்குவகிப்பர். குறிப்பாக தீப்தி சர்மா, தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்து அசத்தினார்.

இப்போட்டியில் எங்களது 'பீல்டிங்', 'பவுலிங்' சிறப்பாக இருந்தது. பேட்டிங்கில் இன்னும் சிறிது முன்னேற்றம் தேவைப்படுகிறது. அடுத்து வரும் போட்டிகளில் பேட்டிங்கை பலப்படுத்துவோம்.

இவ்வாறு ஹர்மன்பிரீத் கவுர் கூறினார்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN