பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய இலங்கை..!

Indian News

Indian News

Author 2019-10-08 09:59:44

img

இலங்கை , பாகிஸ்தான் இடையே இரண்டாவது டி 20 போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து182 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக பானுக 76 ரன்கள் அடித்தார். பின்னர் 183 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஆட்டம் தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்தது.

தொடக்க வீரர்களான பாபர் ஆசாம் 3, ஃபக்கர் ஜமான் 6 ரன்னில் வெளியேற பாகிஸ்தான் அணி 19 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இலங்கை அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரண்டு போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.நாளை மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நடைபெற உள்ளது.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN