பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் திடீர் நீக்கம்:

Webdunia

Webdunia

Author 2019-10-19 11:23:19

img

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃப்ராஸ் அகமது திடீரென நீக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் மற்றும் டி-20 அணியின் கேப்டனாக இருந்த சர்ஃப்ராஸ் நீக்கத்தை அடுத்து அவருக்கு பதில் 'அஸார் அலி' டெஸ்ட் அனியின் கேப்டனாகவும், டி20 அணியின் கேப்டனாக பாபர் அசாமும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதனையடுத்து விரைவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் செயல்படுவார் என தெரிகிறது

சமீபத்தில் நடந்து முடிந்த உலக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் தோல்விக்குள்ளானது சர்ச்சையான நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரிலும் பாகிஸ்தான் அணி சொந்த மண்ணிலேயே தொடரை இழந்ததும் இந்த நீக்கத்திற்கு காரணமாக கூறப்படுகிறது

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN