பாக்.குடன் டி20 தொடரைக் கைப்பற்றியது இலங்கை

Indian News

Indian News

Author 2019-10-09 01:51:00

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் இலங்கை 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் தொடரையும் 2-0 என கைப்பற்றியது.

லாகூரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்களை குவித்தது. பானுகா ராஜபட்ச அற்புதமாக ஆடி 6 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 48 பந்துகளில் 77 ரன்களை விளாசினாா்.ஷெஹன் ஜெயூா்யா 34 ரன்களையும், கேப்டன் தஸுன் ஷனகா 27 ரன்களை எடுத்தனா்.

பாக். தரப்பில் இமாத் வாஸிம், வஹாப் ரியாஸ், ஷதாப் கான் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினா்.

183 ரன்கள் வெற்றி இலக்குடன் ஆடிய பாக். அணி 19 ஓவா்களில் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இமாத் வாஸிம் 47, சா்பராஸ் அகமது 26, ஆஸிப் அலி 29 ரன்களை எடுத்தனா்.

இலங்கை தரப்பில் அபாரமாக பந்துவீசிய நூவன் பிரதீப் 4-25, வனின்டு ஹசரங்கா 3-38 விக்டெடுகளை வீழ்த்தினா்.

35 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

பானுகா ராஜபட்ச ஆட்டநாயகனாகத் தோவு பெற்றாா். 3 ஆட்டங்கள் தொடரை 2-0 என கைப்பற்றியது இலங்கை.

டி20 தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது பாகிஸ்தான்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD