பாக்.,- இலங்கை போட்டி ரத்து

Indian News

Indian News

Author 2019-09-28 00:40:33

img

கராச்சி: இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி மழையால் ரத்தானது.

கடந்த 2009ல் பாகிஸ்தான் சென்ற இலங்கை கிரிக்கெட் அணியினர் 'பஸ்' மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதன் பின், ஜிம்பாப்வே, விண்டீஸ் அணிகளை தவிர மற்ற அணிகள் செல்ல தயங்கின. ஒருவழியாக, 'சீனியர்' வீரர்கள் இல்லாத இலங்கை அணி தற்போது பாகிஸ்தான் சென்றுள்ளது. மூன்று ஒரு நாள், மூன்று 'டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி கராச்சியில் நேற்று நடப்பதாக இருந்தது. இம்மைதானத்தில் 10 ஆண்டுக்குப்பின், ஒரு நாள் போட்டி நடப்பதை பார்க்க ரசிகர்கள் வந்திருந்தனர்.

ஆனால், கனமழை பெய்ததால் ஆடுகளம் தார்ப்பாயால் மூடப்பட்டிருந்தது. பவுண்டரி எல்லைப்பகுதிகள் மோசமாக இருந்ததால், போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இரண்டாவது போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கவுள்ளது.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN