பாண்ட்யாவுக்கு 'ஆப்பரேஷன்'

Indian News

Indian News

Author 2019-10-02 05:17:28

img

புதுடில்லி: 'ஆல் ரவுண்டர்' ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஆப்பரேஷன் செய்யப்படும் எனத் தெரிகிறது. இதனால் அடுத்த ஐந்து மாதம் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு 'ஆல் ரவுண்டர்' ஹர்திக் பாண்ட்யா 25. இவர் 11 டெஸ்ட் (532 ரன், 17 விக்.,), 54 ஒருநாள் (937 ரன், 54 விக்.,), 40 'டுவென்டி-20' (310 ரன், 38 விக்.,) போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

அணியின் முக்கிய வீரரான இவர், வரும் 'டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கான (2020) அணியில் எப்படியும் இடம் பெறுவர் என கூறப்படுகிறது. பாண்ட்யாவுக்கு, கடந்த ஆசிய கோப்பை தொடரில் முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டது.

ஒரு வழியாக உலக கோப்பை தொடரில் பங்கேற்றார். தற்போது மீண்டும் இவர் காயத்தால் அவதிப்படுகிறார்.

இதற்காக டாக்டரிடம் ஆலோசனை பெற இங்கிலாந்து செல்லவுள்ளார். இங்கு இவருக்கு முதுகில் ஆப்பரேஷன் செய்யப்படும் எனத் தெரிகிறது. இது நடந்தால் அடுத்த ஐந்து மாதங்கள் பாண்ட்யா போட்டிகளில் பங்கேற்க முடியாது.

2020 ஐ.பி.எல்., தொடரில் ஒருவேளை களமிறங்கலாம். ஏற்கனவே வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும் சிகிச்சைக்காக லண்டன் செல்லவுள்ளார். இரு முக்கிய வீரர்கள் காயத்தால் அவதிப்படுவது இந்தியாவுக்கு பின்னடைவு தான்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN