பிசிசிஐ தலைவராக கங்குலி அணிந்த உடை: வெளியான ரகசியம்

Lankasri

Lankasri

Author 2019-10-24 13:15:17

பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி அணிந்து வந்த கருநீல நிற மேலாடை தொடர்பில் ரகசியம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முழு நேர தலைவராக கிரிக்கெட் வீரர் ஒருவர் பொறுப்பேற்பது கடந்த 65 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.

இந்த பெருமையோடு செய்தியாளர்களை சந்திக்க வந்த சவுரவ் கங்குலி, கருநீல நிற மேலாடை அணிந்திருந்தார்.

இதை கவனித்த செய்தியாளர்கள், இந்த உடை தளர்வாக இருக்கிறதே, அப்படி என்ன இந்த உடையில் விசேஷம் என்று கேட்டனர்.

img

அதற்கு பதிலளித்த கங்குலி ‘நான் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக பொறுப்பேற்ற போது இந்த ‘பிளேஸர்’ உடை எனக்கு கிடைத்தது.

அதையே இன்று கிரிக்கெட் வாரிய தலைவராக பதவி ஏற்கும் நாளில் அணிந்து கொள்வது என்று முடிவு செய்தேன். ஆனால் இந்த அளவுக்கு தளர்வாக இருக்கும் என்று உணரவில்லை என பதிலளித்துள்ளார்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN