பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி ஒருமனதாக தேர்வு?

IPL KING DHONI

IPL KING DHONI

Author 2019-10-14 10:17:56

தமிழில் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நமது பக்கத்துடன் இணைந்திருங்கள் தங்களது கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நமது சேனலை follow செய்யாதவர்கள் follow பட்டனை கிளிக் செய்யுங்கள்.

imgThird party image reference

முக்கிய செய்தி

பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி ஒருமனதாக தேர்வு?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பொறுப்பேற்க உள்ளார். 

பி.சி.சி.ஐ. நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் மும்பையில் உள்ள ஓட்டலில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகளாக யாரைத் தேர்வு செய்வது என விரிவாக விவாதிக்கப்பட்டது.

முன்னாள் கிரிக்கெட் வாரிய தலைவர்களான அனுராக் தாகூர் மற்றும் சீனிவாசன் ஆகியோர் தங்கள் தரப்பில் இருந்து தலைவரைத் தேர்வு செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இறுதியில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியைத் பி.சி.சி.ஐ. தலைவராக்குவது என முடிவுசெய்யப்பட்டது.

கர்நாடகாவைச் சேர்ந்த பிரிஜேஷ் பட்டேல் ஐ.பி.எல். நிர்வாகக் குழுவின் தலைவராக செயல்படுவார். அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா செயலாளராகவும், அனுராக் தாகூரின் சகோதரர் அருண் துமால் பொருளாளராகவும், கேரளாவைச் சேர்ந்த ஜாயேஷ் ஜார்ஜ் இணைச் செயலாளராகவும் தேர்வாகின்றனர்.

நிர்வாகிகள் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும். யார் யாருக்கு எந்தப் பதவி என்பது இறுதி செய்யப்பட்டு விட்டதால் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. வருகிற 23ந் தேதி மும்பையில் நடைபெறும் ஆண்டுக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் பதவியேற்றுக் கொள்வார்கள்.

47 வயதான சவுரவ் கங்குலி கடந்த 1992ம் ஆண்டு முதல் 2008 வரை இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடியுள்ளார். கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டனாக ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்றுள்ளார்.

பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக கங்குலி தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார். லோதா கமிட்டியின் பரிந்துரைகளை அடுத்து கடந்த 33 மாதங்களாக பிசிசிஐயில் தலைவர் பொறுப்பு உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளும் காலியாகவே உள்ளன

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN