பிராட்மேனை முந்திய ரோகித்

Indian News

Indian News

Author 2019-10-20 22:40:48

img

ராஞ்சி: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்டில் இரட்டை சதமடித்த இந்தியாவின் ரோகித் சர்மா, ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேன் சாதனையை முறியடித்தார்.

இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் ராஞ்சியில் நடக்கிறது. இதன் முதல் இன்னிங்சில் 212 ரன்கள் குவித்த இந்தியாவின் ரோகித் சர்மா, சொந்த மண்ணில் விளையாடிய 12 டெஸ்டில், 1298 ரன்கள் குவித்துள்ளார். இவரது சராசரி 99.84 ஆகும். இது, ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனை விட அதிகம். பிராட்மேன், சொந்த மண்ணில் பங்கேற்ற 33 டெஸ்டில், 4322 ரன்கள் எடுத்துள்ளார். இவரது சராசரி 98.22 ஆக உள்ளது.

இந்தியாவின் ரோகித் சர்மா, 3 டெஸ்டில், 3 சதம் உட்பட 529 ரன்கள் எடுத்துள்ளார்.

இதன்மூலம் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக ரன் குவித்த இந்திய வீரரானார். இதற்கு முன், 1996-97ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இந்தியாவின் முகமது அசார், 388 ரன்கள் எடுத்திருந்தது அதிகபட்சமாக இருந்தது.

* ஒரு டெஸ்ட் தொடரில் 500 அல்லது அதற்கு மேல் ரன் குவித்த 5வது இந்திய துவக்க வீரரானார் ரோகித். ஏற்கனவே வினோ மன்கத் (526 ரன்), புதி குந்தேரன் (525), சுனில் கவாஸ்கர் (500, 514, 542, 732, 774), சேவக் (544) இப்படி ரன் சேர்த்திருந்தனர்.

* தவிர இவர், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அதிக ரன் குவித்த இந்திய துவக்க வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இதற்கு முன், 2005ல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவின் சேவக் 544 ரன்கள் எடுத்திருந்தது அதிகபட்சமாக இருந்தது.

முதலிரண்டு டெஸ்டில் மயங்க் அகர்வால் (215), கேப்டன் கோஹ்லி (254*) இரட்டை சதம் கடந்தனர். தற்போது 3வது டெஸ்டில் ரோகித் (212) இம்மைல்கல்லை எட்டினார். இதன்மூலம் தொடர்ச்சியாக 3 டெஸ்டில், இந்திய வீரர் யாராவது ஒருவர் இரட்டை சதமடித்த சம்பவம், 2வது முறையாக அரங்கேறியது.

இதற்கு முன், 2016-17ல் கோஹ்லி (235, எதிர்: இங்கிலாந்து), கருண் நாயர் (303*, எதிர்: இங்கிலாந்து), கோஹ்லி (204, எதிர்: வங்கதேசம்) ஆகியோர் தொடர்ச்சியாக 3 டெஸ்டில் இரட்டை சதம் கடந்தனர்.

* தவிர, ஒரு டெஸ்ட் தொடரில் இந்தியா சார்பில் 3 இரட்டை சதம், 2வது முறையாக பதிவானது. இதற்கு முன், 1955-56ல் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவின் வினோ மன்கத் (2 முறை), பாலி உம்ரிகர் (1) இரட்டை சதமடித்திருந்தனர்.

அபாரமாக ஆடிய ரோகித் சர்மா, 212 ரன்கள் குவித்தார். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் முதன்முறையாக இரட்டை சதமடித்த இவர், தனது அதிகபட்ச ரன்னை பதிவு செய்தார். இதற்கு முன், 2013ல் கோல்கட்டாவில் நடந்த விண்டீசுக்கு எதிரான போட்டியில் 177 ரன்கள் எடுத்தது இவரது அதிகபட்சமாக இருந்தது.

* தவிர இவர், சர்வதேச அரங்கில் 4வது முறையாக இரட்டை சதமடித்தார். ஏற்கனவே 3 முறை (264, 209, 208) ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்திருந்தார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD