புதிய கேப்டன் ரோகித் சர்மா * இந்திய அணி அறிவிப்பு

Indian News

Indian News

Author 2019-10-25 06:06:13

img

மும்பை: வங்கதேச அணிக்கு எதிரான 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். ஷிவம் துபே முதன் முறையாக இடம் பெற்றார்.

இந்தியா வரவுள்ள வங்கதேச அணி மூன்று 'டுவென்டி-20', இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. முதலில் 'டுவென்டி-20' தொடர் நடக்கிறது. முதல் போட்டி நவ. 3ல் டில்லியில் நடக்கவுள்ளது. அடுத்த போட்டிகள் ராஜ்கோட் (நவ. 7), நாக்பூரில் (நவ. 10) நடக்கின்றன.

இதற்கான இந்திய அணி தேர்வு மும்பையில் நடந்தது. 'டுவென்டி-20' தொடருக்கான அணியில் கேப்டன் கோஹ்லிக்கு ஓய்வு தரப்பட்டது.

ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

துபேவுக்கு இடம்

ஹர்திக் பாண்ட்யா முதுகுப்பகுதி ஆப்பரேஷனில் இருந்து இன்னும் மீளாத நிலையில், 'ஆல் ரவுண்டர்' இடத்தில், ஷிவம் துபே 26, முதன் முறையாக சேர்க்கப்பட்டார். மும்பையை சேர்ந்த இவர், இந்திய 'ஏ' அணிக்காக சிறப்பாக விளையாடியதால் இந்த வாய்ப்பு கிடைத்தது. இதனால் தமிழகத்தின் விஜய் சங்கர் வாய்ப்பு பறிபோனது.

சஞ்சு வாய்ப்பு

தோனிக்குப் பதில் ரிஷாப் பன்ட் மட்டும் விக்கெட் கீப்பராக இடம் பெற்ற நிலையில், கேரளாவின் சஞ்சு சாம்சனும் 24, அணியில் இடம் பெற்றுள்ளார். 2015ல் ஜிம்பாப்வேக்கு எதிராக விளையாடினார். விஜய் ஹசாரே தொடரில் 410 ரன் குவிக்க, தற்போது 4 ஆண்டுக்குப் பின் மீண்டும் சேர்க்கப்பட்டார்.

ஜடோஜாவுக்கு ஓய்வு தரப்பட்டது. டில்லியின் நவ்தீப் சைனிக்கு உடற்தகுதி இல்லாததால் ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டார். இதேபோல பவுலிங்கில் சுழல் வீரர் சகால் அணிக்கு திரும்பியுள்ளார்.

'டுவென்டி-20' அணி

ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷாப் பன்ட், வாஷிங்டன் சுந்தர், குர்னால் பாண்ட்யா, சகால், ராகுல் சகார், தீபக் சகார், கலீல் அகமது, ஷிவம் துபே, ஷர்துல் தாகூர்.

மாற்றம் இல்லை

வங்கதேசத்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அணியில் எவ்வித மாற்றமும் இல்லை. சமீபத்திய தென் ஆப்ரிக்க தொடரில் பங்கேற்ற அதே அணி களமிறங்குகிறது. குல்தீப் யாதவ் காயத்தில் இருந்து மீண்டதால், ராஞ்சி அறிமுக டெஸ்டில் அசத்திய ஷாபாஸ் நதீமுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

டெஸ்ட் அணி

கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, ரகானே, ஹனுமா விஹாரி, சகா, ஜடேஜா, அஷ்வின், குல்தீப் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, சுப்மன் கில், ரிஷாப் பன்ட்.

ஷிவம் துபே அறிமுகம்

மும்பையை சேர்ந்தவர் ஷிவம் துபே 26. 2016ல் சையது முஷ்டாக் அலி தொடரில் களமிறங்கினார். 2018ல் பரோடா அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் சுவப்னில் ஓவரில் 5 பந்தில் 5 சிக்சர் விளாசினார். 2019 ஐ.பி.எல்., சீசனில் பெங்களூரு அணிக்காக ரூ. 5 கோடிக்கு வாங்கப்பட்டார். ஒட்டுமொத்தமாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாட, இந்திய அணிக்கு தேர்வாகி உள்ளார்.

அட்டவணை

தேதிபோட்டிஇடம்

நவ. 3முதல் 'டுவென்டி-20'டில்லி

நவ. 72வது 'டுவென்டி-20'ராஜ்கோட்

நவ. 103வது 'டுவென்டி-20'நாக்பூர்

நவ. 14-18முதல் டெஸ்ட்இந்துார்

நவ. 22-262வது டெஸ்ட்கோல்கட்டா

* பகல் 9:30 மணிக்கு டெஸ்ட், இரவு 7:00 மணிக்கு 'டுவென்டி-20' போட்டிகள் துவங்கும்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN