புதிய சாதனை படைத்த விராட் கோலி...!

News 7

News 7

Author 2019-10-11 15:21:39

img

அடுத்தடுத்து பல்வேறு சாதனைகளை படைத்து வரும் விராட் கோலி, தற்போது சர்வதேச போட்டிகள் 40 சதங்கள் அடித்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை எட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணியுடன் விளையாடி வருகிறது. மொத்தம் 3 டெஸ்ட், 3 டி20, மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் இரு அணிகளும் மோதுகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடர், 1-1 என்ற கணக்கில் சமன் ஆனது. இந்நிலையில் இரு அணிகளும் தற்போது, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை ஆடி வருகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது 2வது டெஸ்ட் போட்டி, புனேவில் நடைபெற்று வருகிறது . இப்போட்டியில்தான் இந்திய அணி கேப்டன் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். இவர், இப்போட்டியில் 173 பந்துகளில் சதம் விளாசியுள்ளார். இதன் மூலம் தனது 26 டெஸ்ட் சததத்தை பூர்த்தி செய்த அவர், சர்வதேச போட்டிகளில் 40 சதங்கள் அடித்த முதல் இந்திய கேப்டன் என்றும் சர்வதேச அளவில் 2வது கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் இந்தாண்டில் விராட் கோலியின் முதல் டெஸ்ட் சதமும் இதுவே ஆகும்.

30 வயதான இந்திய கேப்டன் விராட் கோலி, இதுவரை 26 டெஸ்ட் சதங்களும் , சர்வதேச அளவில் 69 சதங்களும் அடித்துள்ளார். நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி தற்போது மூன்று விக்கெட்டுகளை இழந்து 356 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. கேப்டன் கோலி 104 ரன்களுடனும், துணை கேப்டன் ரஹானே 58 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN