புளூ ஸ்டார் விளம்பரத் தூதராக விராட் கோலி நியமனம்

The Hindu

The Hindu

Author 2019-10-18 13:15:00

img

குளிர்சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் புளூ ஸ்டார் நிறுவனம், அதன் சந்தையை விரிவுபடுத்தும் நோக்கில் புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மும்பையை தலைமை இடமாகக் கொண்ட இந்நிறுவனம், இந்திய குளிர்சாதன தயாரிப்பு நிறுவனங்களில் முன்னிலையில் இருக்கிறது.

பண்டிகை தினங்கள் தொடர்ச் சியாக வரவுள்ள நிலையில், தன் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் இந்தியாவின் அனைத்து நகரங்களுக்கும் தன் நிறுவன பிராண்டை விளம்பரப்படுத்த உள்ளது. இதன்பொருட்டு விராட் கோலியை விளம்பரத் தூதராக நியமித்துள்ளது. தற்போது இந்நிறுவனத்தின் சந்தைப் பங்கு 12.5 சதவீதமாக உள்ளது. அதை 15 சதவீதமாக உயர்த்தும் முயற்சி யில் இறங்கி உள்ளது. இந்நிறுவ னத்துக்கு தற்போது 200 பிரத்யேக பிராண்ட் ஸ்டோர்கள் உள்ளன.

அதை அடுத்த ஆண்டுக்குள் 250-ஆக உயர்த்த திட்டமிட்டுள் ளது. துபாய், ஆப்ரிக்கா ஆகிய நாடுகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் ஏற்றுமதியும் செய்து வருகிறது. தற்போது அதன் ஏற்றுமதி அளவு 11 சதவீதமாக உள்ளது.

இந்நிலையில், அதை 20 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டு இருப்பதாக அதன் நிர்வாக இயக்குநர் பி.தியாகராஜன் தெரிவித்தார்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN