மகளிர் கிரிக்கெட் ஒருநாள் தொடரை வென்றது இந்தியா

Indian News

Indian News

Author 2019-10-12 09:33:13

img

வதோதரா: தென் ஆப்ரிக்க மகளிர் கிரிக்கெட் அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இந்தியா - தென் ஆப்ரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகளிடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி நேற்று நடைபெற்றது. வதோதரா, ரிலையன்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்தியா முதலில் பந்துவீசியது. தென் ஆப்ரிக்கா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 247 ரன் குவித்தது. லிஸெல் லீ 40, வுல்வார்ட் 69, த்ரிஷா 22, டு பிரீஸ் 44, குட்ஆல் 38 ரன் எடுத்தனர்.

இந்திய பந்துவீச்சில் ஷிகா பாண்டே, ஏக்தா பிஷ்ட், பூனம் யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய இந்திய அணி 48 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன் எடுத்து வென்றது. பிரியா பூனியா 20, ஜெமிமா ரோட்ரிகியூஸ் 18, பூனம் ராவுத் 65, கேப்டன் மித்தாலி ராஜ் 66, தீப்தி 2 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ஹர்மான்பிரீத் கவுர் 39 ரன், டானியா பாட்டியா 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பூனம் ராவுத் சிறந்த வீராங்கனை விருது பெற்றார். இந்தியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிய நிலையில், 2வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வதோதராவில் நாளை மறுநாள் காலை 9.00 மணிக்கு தொடங்குகிறது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD