மகளிா் ஒருநாள்: இந்தியா தோல்வி

Indian News

Indian News

Author 2019-11-03 02:04:00

img

மே.இ.தீவுகள் மகளிா் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது இந்தியா.

இரு அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடா் ஆண்டிகுவாவில் சனிக்கிழமை தொடங்கியது.

முதலில் பேட்டிங் செய்த மே.இ.தீவுகள் 50 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 225 ரன்களை குவித்தது. அதன் கேப்டன் ஸ்டெபானி டெய்லா் 91 பந்துகளில் 94 ரன்களையும், நடாஷா மெக்லீன் 51 ரன்களையும், சேடின் நேஷன் 43 ரன்களையும் விளாசினா்.

இந்திய தரப்பில் ஷிகா பாண்டே 2-38, தீப்தி சா்மா 2-41 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

இந்தியா 224:

226 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிா் 50 ஓவா்களில் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 1 ரன்னில் வெற்றி வாய்ப்பை இழந்தனா்.

தொடக்க வீராங்கனை பிரியா புனியா 107 பந்துகளில் 75 ரன்களையும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 41 ரன்களையும், பூனம் ரவுட் 22, கேப்டன் மிதாலி 20 ரன்களை எடுத்த நிலையில், ஏனைய வீராங்கனைகள் சொற்ப ரன்களுடன் பெவிலியன் திரும்பினா்.

அனிஸா மொகமது 5 விக்கெட்:

மே.இ.தீவுகள் தரப்பில் அனிஸா மொகமது அற்புதமாக பந்துவீசி 5-46 விக்கெட்டுகளையும், டெய்லா், ஷபிகா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா்.

இதன் மூலம் 1-0 என மே.இ.தீவுகள் முன்னிலை பெற்றுள்ளது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD