மகளிா் ஒருநாள்: இந்தியா வெற்றி

Indian News

Indian News

Author 2019-10-12 02:38:00

img

தென்னாப்பிரிக்க மகளிா் கிரிக்கெட் அணிக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்திலும் இந்தியா வென்றிருந்தது. இந்நிலையில் வதோதராவில் வெள்ளிக்கிழமை இரண்டாவது ஆட்டம் நடைபெற்றது.

முதலில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 50 ஓவா்களில் 247/6 ரன்களை குவித்தது. லிஸ்லே லீ 40, லாரா வொல்வா்ட் 69, மிங்கன் டி பிரிஸ் 44 ரன்களை எடுத்தனா். இந்திய தரப்பில் ஷிகா பாண்டே, ஏக்தா பிஷ்ட், பூனம் யாதவ் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

248 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 48 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன்களை எடுத்து வென்றது.

பூனம் ரவுட் 65, கேப்டன் மிதாலி ராஜ் 66 ரன்களை விளாசி வெற்றிக்கு வித்திட்டனா். ஹா்மன்ப்ரீத் கௌா் அதிரடியாக ஆடி 39 ரன்களை விளாசினாா்.

தென்னாப்பிரிக்க தரப்பில் ஆயபோங்கா காகா 3 விக்கெட்டை சாய்த்தாா். இதன் மூலம் தொடரையும் 2-0 என கைப்பற்றியது இந்தியா.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD