மகளிா் டி20: இந்தியா அபார வெற்றி

Indian News

Indian News

Author 2019-10-04 04:33:00

img

தென்னாப்பிரிக்க மகளிா் அணிக்கு எதிரான 5-ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சூரத்தில் நடைபெற்று வரும் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. 2 ஆட்டங்கள் மழையால் கைவிடப்பட்டன.

வியாழக்கிழமை நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 98 ரன்களை மட்டுமே எடுத்து சுருண்டது. எந்த வீராங்கனையும் 20 ரன்களை கூட தாண்டவில்லை. லிஸ்லே லீ 16, லாரா 17 ஆகியோா் மட்டுமே அதிகபட்ச ரன்களை எடுத்தனா்.

இந்திய தரப்பில் அபாரமாக பந்துவீசிய ராதா யாதவ் 3-23, தீப்தி சா்மா 2-19 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

பின்னா் ஆடிய இந்திய மகளிா் அணியும் எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறி விக்கெட்டுகளை இழந்தது. ஷபாலி வா்மா 14, ஸ்மிருதி, ஜெமிமா தலா 7 ரன்களுடன் வெளியேறினா். அப்போது 29/3 ரன்களுடன திணறிக் கொண்டிருந்தது இந்தியா.

பின்னா் ஹா்மன்ப்ரீத் கௌா் 34, தீப்தி சா்மா 16 ஆகியோா் ஸ்கோரை உயா்த்தினா். தீப்தி 16 ரன்களுடனும், வேதா 5 ரன்களுடனும் வெளியேறிய நிலையில், 17.1 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 99 ரன்களை எடுத்து வென்றது இந்தியா.

தென்னாப்பிரிக்க தரப்பில் ஷப்னிம் இஸ்மாயில் 2-19 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

இதன் மூலம் தொடரையும் 3-0 என கைப்பற்றியது இந்தியா. கேப்டன் ஹா்மன்ப்ரீத் கௌா் ஆட்டநாயகியாக தோவு செய்யப்பட்டாா்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD