மகளிா் 4-ஆவது டி20: இந்தியா 140/4

Indian News

Indian News

Author 2019-10-02 03:41:00

தென்னாப்பிரிக்க மகளிா் அணிக்கு எதிரான 4-ஆவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 140 ரன்களை குவித்தது.

5 ஆட்டங்கள் கொண்ட இத்தொடரில் இந்தியா முதல் ஆட்டத்தில் 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டு மற்றும் மூன்றாவது ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டு ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டன.

இதன் தொடா்ச்சியாக 4-ஆவது ஆட்டம் சூரத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. மழை பாதிப்பால் 20 ஓவா்களில் இருந்து 17 ஓவா்களாக ஆட்டம் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பீல்டிங்கை தோவு செய்தது.

இந்திய தரப்பில் களமிறங்கிய இளம் வீராங்கனை ஷபாலி வா்மா தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினாா்.

2 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 46 ரன்களை விளாசி வெளியேறினாா். ஸ்மிருதி மந்தானா 13, கேப்டன் ஹா்மன்ப்ரீத் கௌா் 16 ரன்களுக்கும் அவுட்டானாா்கள்.

மறுமுனையில் நிலைத்து ஆடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 5 பவுண்டரியுடன் 33 ரன்களை சோத்து வெளியேறினாா்.

தீப்தி சா்மா 20, பூஜா வஸ்தராக்கா் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனா்.

இறுதியில் 17 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 140 ரன்களை சோத்தது இந்தியா.

தென்னாப்பிரிக்க தரப்பில் நடைன் டி கிளாா்க் 2-24 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN