மக்கள் மனம் கவர்ந்த தோனி, மேரிகோம்

Indian News

Indian News

Author 2019-09-27 03:30:41

img

புதுடில்லி: இந்தியாவில் மிகவும் போற்றப்படும் ஆண்களில் முதல் இரண்டு இடங்களை பிரதமர் மோடி, கிரிக்கெட் வீரர் தோனி பெற்றுள்ளனர். பெண்களில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தேர்வானார்.

பிரிட்டனை சேர்ந்த சர்வதேச இணையதள மார்கெட் ஆராய்ச்சி நிறுவனம் 'யுகோவ்'. உலகம் முழுவதும் மக்களால் போற்றப்படும் ஆண், பெண் பிரபலங்கள் குறித்து கருத்துக்கணிப்பு நடத்தியது. 42 நாடுகளை சேர்ந்த 42,000 பேர் இதில் பங்கேற்றனர்.

இந்தியாவில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் மக்களால் அதிகம் போற்றப்படுபவர்களில், பிரதமர் மோடி 'நம்பர்-1' இடம் பெற்றார். இவருக்கு 15.66 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. அடுத்த இடத்தை இந்தியாவுக்கு இரு உலக கோப்பை வென்று தந்த, முன்னாள் கேப்டன் தோனி பெற்றார்.

இவருக்கு 8.58% ஓட்டுகள் கிடைத்தன.

ரத்தன் டாடா (8.02), பராக் ஒபாமா (7.36), பில் கேட்ஸ் (6.96), அமிதாப் (6.55) அடுத்த இடங்களில் உள்ளனர். ஓய்வு பெற்ற முன்னாள் கேப்டன் சச்சின் (5.81), தற்போதைய கேப்டன் கோஹ்லி (4.46) இப்பட்டியலில் 7, 8வது இடங்களை பெற்றனர். கால்பந்து நட்சத்திரங்களில் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ (2.95), அர்ஜென்டினாவின் மெஸ்சி (2.32) 13, 16வது இடம் பிடித்தனர்.

மேரி கோம் 'டாப்'

போற்றப்படும் பெண் பிரபலங்களில் குத்துச்சண்டை வீராங்கனை, 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம், 'நம்பர்-1' இடம் பிடித்தார். இவருக்கு 10.36 சதவீத ஓட்டுகள் கிடைத்தன.

காயத்தால் அவதியா

கடந்த ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணி கேப்டன் தோனிக்கு முதுகுப் பகுதியில் வலி ஏற்பட்டது. உலக கோப்பை தொடரில் இது மேலும் மோசமானது. பின் இவரது மணிக்கட்டிலும் காயம் ஏற்பட்டது. இதனால் தான் அடுத்தடுத்த தொடர்களில் தோனி, அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. வரும் நவ., முதல் மீண்டும் களமிறங்குவார் எனத் தெரிகிறது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD