மயங்க் அகர்வால் சதம்

Indian News

Indian News

Author 2019-10-03 12:30:00

img

விசாகப்பட்டனம்: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர் மயங்க் அகர்வால், டெஸ்ட் அரங்கில் முதல் சதம் அடித்தார்.இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் விசாகப்பட்டனத்தில் நடக்கிறது. மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா (115), மயங்க் அகர்வால் (84) அவுட்டாகாமல் இருந்தனர்.இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடக்கிறது. ரோகித், மயங்க் அகர்வால் இருவரும் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தனர். மயங்க் அகர்வால், டெஸ்ட் அரங்கில் முதல் சதம் எட்டினார். இந்திய அணி முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 290 ரன்கள் எடுத்திருந்தது.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN