மயங்க் அகர்வால், ரோகித் அரைசதம்

Indian News

Indian News

Author 2019-10-02 15:40:22

img

விசாகப்பட்டனம்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணியின் ரோகித் சர்மா, மயங்க் அகர்வால் அரைசதம் கடந்தனர்.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டனத்தில் நடக்கிறது. இந்திய அணியில் விக்கெட் கீப்பர் விரிதிமன் சகா, சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் இடம் பிடித்தனர். ஐந்து பவுலர்களுடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணியில் டேன் பீட், கேஷவ் மஹராஜ், செனுரன் முத்துசாமி என, மூன்று சுழற்பந்துவீச்சாளர் தேர்வாகினர். 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, 'பேட்டிங்' தேர்வு செய்தார்.

இந்திய அணிக்கு மயங்க் அகர்வால், ரோகித் சர்மா நல்ல துவக்கம் தந்தது. அபாரமாக ஆடிய ரோகித், டெஸ்ட் அரங்கில் தனது 11வது அரைசதமடித்தார். மறுமுைனையில் அசத்திய அகர்வால், மஹராஜ் பந்தை சிக்சருக்கு அனுப்பி அரைசதம் கடந்தார்.

உணவு இடைவேளைக்கு பின், முதல் இன்னிங்சில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 112 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் (52), அகர்வால் (59) அவுட்டாகாமல் இருந்தனர்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN