மழை தயவில் தப்பிய பாக்.,

Indian News

Indian News

Author 2019-11-04 01:40:38

img

சிட்னி: ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய முதலாவது 'டுவென்டி-20' போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி சிட்னியில் நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

பாகிஸ்தான் அணிக்கு பகார் ஜமான் (0), ஹாரிஸ் சோகைல் (4) ஏமாற்றினார். முகமது ரிஸ்வான் (31) ஆறுதல் தந்தார். பாகிஸ்தான் அணி 12.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 88 ரன் எடுத்திருந்த போது மழையால் போட்டி சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. மழை நின்ற பின், 15 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது.

ஆசிப் அலி (11) நிலைக்கவில்லை. இமாத் வாசிம் 'டக்-அவுட்' ஆனார். ரிச்சர்ட்சன் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய பாபர் ஆஸம் அரைசதம் கடந்தார்.

பாகிஸ்தான் அணி 15 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்தது. ஆஸம் (59), இப்திகார் அகமது (1) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க், ரிச்சர்ட்சன் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

மீண்டும் மழை: பின், 'டக்வொர்த் லீவிஸ்' முறைப்படி 15 ஓவரில், 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணி 3.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 41 ரன் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது. வார்னர் (2), பின்ச் (37) அவுட்டாகாமல் இருந்தனர்.

தொடர்ந்து மழை பெய்ததால், போட்டியை பாதியில் ரத்து செய்தவாக அம்பயர்கள் தெரிவித்தனர். இதனால் குறைந்த ஸ்கோரை எடுத்த பாகிஸ்தான் அணி மழை தயவில் தப்பியது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD