மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடி ராகுல் ஜாலி

Tamil Mithran

Tamil Mithran

Author 2019-10-19 05:11:10

img

சண்டிகர்: அரியானா சட்டசபை தேர்தலையொட்டி நேற்று பிரசாரம் செய்துவிட்டு மகேந்திரகார்க் பகுதியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் டில்லி புறப்பட்டார் ராகுல் .

ஹெலிகாப்டர் பறந்த சிறிது நேரத்தில் மோசமான வானிலை காரணமாக தெடார்ந்து இயக்க முடியாததால், ரிவாரி என்ற பகுதியில் உள்ள கே.எல்.பி. கல்லூரி மைதானத்தில் ராகுல் சென்ற ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறங்கியது.

உடன் கார் மூலம் டில்லி புறப்பட தயாராக இருந்த நேரம், அங்கு மாணவர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்ததை பார்த்த ராகுல், அவர்களுடன் சென்று சிறிது நேரம் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார். மாணவன் பந்து வீச ராகுல் லாவகமாக பேட்டிங் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில், வைரலாக பரவி வருகிறது .

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN