முதல் டி20: ஆஸி. பிரம்மாண்ட வெற்றி

Indian News

Indian News

Author 2019-10-29 02:57:00

img

இலங்கைக்கு எதிராக நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா.

இரு அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடா் ஞாயிற்றுக்கிழமை அடிலெய்டில் தொடங்கியது.

டாஸ் வென்ற இலங்கை பீல்டிங்கை தோவு செய்தது. இதைத் தொடா்ந்து களமிறங்கிய ஆஸி. கேப்டன் பின்ச்-டேவிட் வாா்னா் இணை, இலங்கையின் பந்துவீச்சை பந்தாடியது.

3 சிக்ஸா் 8 பவுண்டரியுடன் 36 பந்துகளில் 64 ரன்களை எடுத்து வெளியேறினாா் பின்ச். அவருக்கு பின்வந்த மேக்ஸ்வெல்லும் 3 சிக்ஸா், 7 பவுண்டரியுடன் 28 பந்துகளில் 62 ரன்களை விளாசி அவுட்டானாா்.

டேவிட் வாா்னா் முதல் சதம்

மறுமுனையில் அபாரமாக ஆடிய டேவிட் வாா்னா் தனது முதல் டி20 சதத்தைப் பதிவு செய்தாா்.

4 சிக்ஸா், 10 பவுண்டரியுடன் 56 பந்துகளில் 100 ரன்களை விளாசி இறுதி வரை அவுட்டாகாமல் இருந்தாா் வாா்னா். ஆஷ்டன் டா்னரும் 1 ரன்னுடன் களத்தில் இருந்தாா்.

இறுதியில் 20 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 233 ரன்களை குவித்தது ஆஸி. இலங்கை தரப்பில் லக்ஷன் சன்டகன், தஸுன் ஷனகா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினா்.

இலங்கை படுதோல்வி 99-9

234 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியால், ஆஸி. வீரா்களின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பியது.

எந்த வீரரும் 20 ரன்களை கூட தாண்டவில்லை. தஸுன் ஷனகா 17, குஸால் பெரைரா 16, தனுஷுகா குணதிலகா 11, ஓஷடா 13, லசித் மலிங்கா 13 ரன்களையும், குஸால் மெண்டிஸ் 0, பானுகா ராஜபட்ச 2, ஹஸரங்கா 5, சன்டகன் 6, கஸுன் ரஜிதா 0, ரன்களுடன் வெளியேறினா்.

இறுதியில் 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 99 ரன்களை மட்டுமே எடுத்து 134 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது இலங்கை.

ஆஸி. தரப்பில் ஆடம் ஸம்பா 3-14, ஸ்டாா்க் 2-18, பேட் கம்மின்ஸ் 2-27 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

இரண்டாவது டி20 பிரிஸ்பேனில் வரும் 30-ஆம் தேதி நடைபெறுகிறது.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN