முதல் டி20 போட்டியில் இன்று இந்தியா - வங்கதேசம் மோதல்

Indian News

Indian News

Author 2019-11-03 02:37:10

img

புதுடெல்லி: இந்தியா - வங்கதேசம் மோதும் முதல் டி20 போட்டி, டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா வந்துள்ள வங்கதேச அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டி டெல்லியில் இன்று நடைபெறுகிறது. விராத் கோஹ்லிக்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், ரோகித் ஷர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. ஷாகிப் ஹசனுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளதால், வங்கதேச அணி கேப்டனாக மகமதுல்லா பொறுப்பேற்றுள்ளார். தமிம் இக்பால், மோர்டசா, சைபுதின் ஆகியோர் இல்லாத நிலையில், அந்த அணி கடும் நெருக்கடியை சந்திக்கிறது.

இந்தியா கடைசியாக விளையாடிய 5 டி20 போட்டியில் 4 வெற்றி, 1 தோல்வி கண்டுள்ளது (வங்கதேசம் 3 வெற்றி, 2 தோல்வி).

வங்கதேசத்துக்கு எதிராக இதுவரை 8 டி20 போட்டியில் விளையாடி உள்ள இந்தியா, அனைத்திலும் வென்று ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு இருந்தாலும், இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கலாம். இந்தியா: ரோகித் (கேப்டன்), கலீல் அகமது, சாஹல், தீபக் சாஹர், ராகுல் சாஹர், தவான், துபே, ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, குருணல் பாண்டியா, ரிஷப் பன்ட் (கீப்பர்), கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் (கீப்பர்), ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர்.

வங்கதேசம்: மகமதுல்லா (கேப்டன்), அபு ஹைதர், ஆபிப் உசேன், அல் அமின் உசேன், அமினுல் இஸ்லாம், லிட்டன் தாஸ், அராபத் சன்னி ஜூனியர், முகமது மிதுன், முகமது நயிம், மொசாடெக் உசேன், முஷ்பிகுர் ரகிம், முஸ்டாபிசுர் ரகுமான், ஷபியுல் இஸ்லாம், சவும்யா சர்க்கார், தைஜுல் இஸ்லாம்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD