முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் படைத்த சாதனைகள் இவை தான்.

Indian News

Indian News

Author 2019-10-06 12:18:01

img

தென் ஆப்பிரிக்க அணி இந்திய சுற்றுப்பயணத்தில் உள்ளது. டி 20 முடிந்து அக்டோபர் 2 டெஸ்ட் போட்டிகள் துவங்கியது. இந்த போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பில் சில ஆச்சர்யங்கள் காத்துக்கொண்டிருந்தது.

ஒபெனாரக சொதப்பிய ராகுலுக்கு பதில் ரோஹித் சர்மா, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக விரிதிமன் சஹா சேர்க்கப்பட்டார். மேலும் சில போட்டிகளாக வெளியே இருந்த அஷ்வின் அவர்களுக்கும் சேர்க்கப்பட்டார். ஐந்து பௌலர்களுடன் களம் இறங்காமல் விஹாரிக்கும் டீம்மில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இன்று கடைசி நாள், 9 விக்கெட் கை வசம் உள்ளது, 384 ரன்கள் டார்கெட்.

இந்தளவுக்கு வலுவான சூழ்நிலைக்கு இந்திய செல்ல முக்கிய காரணம் ரோஹித் சர்மா. வாங்க அவர் செய்த சாதனைகளை பார்ப்போம் …

ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த வீரர் இவர் தான். இந்த போட்டியில் 13 சிக்ஸர்கள் விளாசினார். இதற்கு முன் வாசிம் அக்ரம் (1996 ) ஜிம்பாவேக்கு எதிராக அடித்த 12 தான் ரெக்கார்ட். இந்திய சார்பில் நவஜோத் சிங் சித்து 8 நடித்திருந்தார்.

525 ரன்களை குவித்துள்ளனர் நம் ஒப்பனர்கள். ரோஹித் சர்மா (303 ) மாயங்க் அகர்வால் (222 ). இதற்கு முந்தைய இந்திய ரெக்கார்ட் 414 , சுனில் காவஸ்கர் (278 ) மற்றும் ராஜேஷ் சவுகான் (136 ) அடித்தது.

இந்தியர்களில் ஒபெனராக இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த பெருமை சுனில் கவ்ஸ்கரிடம் தான் இருந்தது (மூன்று முறை). தற்பொழுது ரோஹித்தும் இணைந்து விட்டார். இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த ஆறாவது இந்திய பேட்ஸ்மேன். ( விஜய் ஹசாரே, சுனில் காவஸ்கர், ராகுல் டிராவிட், விராட் கோலி, அஜின்க்யா ரஹானே)

ஒபெனர் என்ற ரோலில் தனது முதல் டெஸ்டில் இரட்டை சதம் அடித்துள்ளது ரோஹித் மட்டுமே.

இரண்டு இன்னிங்சிலும் ஸ்டம்பிங் முறையில் அவுட் ஆன முதல் இந்தியரும் இவரே. சர்வதேச அளவில் இதற்கு முன் 22 முறை இது போல நிகழ்ந்துள்ளது.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN