முதல் வெற்றி பெறுமா சென்னை * ஏக்கத்தில் தமிழக ரசிகர்கள்

Funny-videos-001

Funny-videos-001

Author 2019-11-11 08:26:53

img

பெங்களூரு: ஐ.எஸ்.எல்., தொடரில் முதல் வெற்றிக்காக போராடும் சென்னை அணி, இன்று பெங்களூருவை எதிர்த்து களமிறங்குகிறது.

இந்தியாவில் ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் 6வது சீசன் நடக்கிறது. மும்பை, கோல்கட்டா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும்.

இன்று பெங்களூருவில் நடக்கும் லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' பெங்களூரு, 2 முறை சாம்பியன் ஆன சென்னையை(2015, 2017-18)சந்திக்கிறது.

முதல் போட்டியில் கோவாவிடம் தோற்ற சென்னை, அடுத்து மும்பையை 'டிரா' செய்தது. மூன்றாவது போட்டியில் கோல்கட்டாவிடம் வீழ்ந்தது. ரபெல், நெரிஜஸ் உள்ளிட்ட முன்கள வீரர்கள் இருந்தாலும் சரியான 'பினிஷிங்' இல்லாமல் தடுமாறுகிறது சென்னை அணி.

22வயது இளம் வீரர் சாங்டே சற்று நம்பிக்கை தருகிறார்.

தன்பால் கணேஷ், அனிருத் தபா என பலர் இருந்தாலும் கோல் மட்டும் அடிக்க மறுக்கின்றனர். ஆறாவது சீசன் துவங்கி 19 போட்டிகள் முடிந்து விட்டன. அனைத்து அணிகளும் குறைந்தது ஒரு கோல் அடித்து விட்டன. ஆனால், கடந்த சீசன் உட்பட 612 நிமிடங்களாக, சென்னை அணி வீரர்கள் யாரும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.

சென்னை அணி, கடைசியாக 2-1 (2019, பிப்.,) என பெங்களூருவை வீழ்த்தியது.

இதன் பின் கடந்த சீசனில் மூன்று, இம்முறை மூன்று என தொடர்ந்து ஆறு போட்டிகளில் ஒன்றில் கூட வெல்லவில்லை.

இன்று முதல் வெற்றிக்காக போராடும் பெங்களூருவை சந்திக்கிறது. முதல் மூன்று போட்டியிலும் 'டிரா' செய்த பெங்களூரு, ஒரு கோல் மட்டும் அடித்தது சென்னை அணிக்கு ஆறுதலான விஷயம் தான்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN