மேகாலயா வீரர் 10 விக்கெட்

Indian News

Indian News

Author 2019-11-07 03:41:17

img

தேஸ்பூர்: நாகலாந்து அணிக்கு எதிரான விஜய் மெர்ச்சன்ட் டிராபி (16 வயது) கிரிக்கெட் போட்டியில் மேகாலயாவின் நிர்தேஷ் பைசோயா, ஒரு இன்னிங்சில் 10 விக்கெட் கைப்பற்றினார்.

அசாமில் நடக்கும் விஜய் மெர்ச்சன்ட் டிராபி (16 வயது) கிரிக்கெட் தொடருக்கான போட்டியில் மேகாலயா, நாகலாந்து அணிகள் விளையாடுகின்றன. முதல் நாள் ஆட்டத்தில் 'சுழலில்' அசத்திய மேகாலாயாவின் நிர்தேஷ் பைசோயா, 10 விக்கெட்டுகளை அள்ளினார். மொத்தம் 21 ஓவர் வீசிய இவர், 51 ரன் விட்டுக்கொடுத்து 10 விக்கெட் கைப்பற்றினார். இதில் 10 'மெய்டன் ஓவர்' அடங்கும். இதனையடுத்து முதல் இன்னிங்சில் நாகலாந்து அணி 113 ரன்களுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.

கடந்த 1999ல் டில்லியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் இந்தியாவின் அனில் கும்ளே, ஒரு இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்தினார். இதேபோல கடந்த ஆண்டு கூச் பெகார் டிராபி போட்டியில் மணிப்பூரின் ரெக்ஸ் சிங், ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD