ராஜஸ்தான் அணிக்கு மெக்டொனால்டு பயிற்சியாளர்

Indian News

Indian News

Author 2019-10-21 22:36:40

img

மும்பை: ஐ.பி.எல்., ராஜஸ்தான் அணிக்கு ஆஸ்திரேலியாவின் ஆன்ட்ரூ மெக்டொனால்டு புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) 'டுவென்டி-20' தொடரில் இடம் பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக தென் ஆப்ரிக்காவை சேர்ந்த பட்டி அப்டன் இருந்தார். இவரது பயிற்சியின் கீழ், கடந்த சீசனில் (2019) ராஜஸ்தான் அணி 7வது இடம் பிடித்தது. இதனையடுத்து அடுத்த ஆண்டு நடக்கவுள்ள 13வது சீசனுக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்க ராஜஸ்தான் அணி நிர்வாகம் முடிவு செய்தது.

இந்நிலையில், முன்னாள் ஆஸ்திரேலிய 'ஆல்-ரவுண்டர்' ஆன்ட்ரூ மெக்டொனால்டு 38, புதிய தலைமை பயிற்சியாளராக 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஆஸ்திரேலியாவுக்காக 4 டெஸ்டில் பங்கேற்ற இவர், ஐ.பி.எல்., தொடரில் டில்லி (2009), பெங்களூரு (2012-13) அணிகளுக்காக விளையாடி உள்ளார். தவிர இவர், லீசெஸ்டர்ஷயர், விக்டோரியா, மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகளுக்கு தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார். இவரது பயிற்சியின் கீழ் விக்டோரியா அணி, ஷெப்பீல்டு ஷீல்டு கோப்பை வென்றது. ரெனிகேட்ஸ் அணி, முதன்முறையாக 'பிக் பாஷ் லீக்' தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

கடந்த 2008ல் நடந்த ஐ.பி.எல்., முதல் சீசனில் கோப்பை வென்ற ராஜஸ்தான் அணி, அதன்பின் பெரிய அளவில் சோபிக்கவில்லை. புதிய பயிற்சியாளரான மெக்டொனால்டு, ராஜஸ்தான் அணி கோப்பை வெல்ல உதவலாம்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD