ராஞ்சி டெஸ்ட்: இந்திய அணி திணறல்

Indian News

Indian News

Author 2019-10-19 12:30:00

img

ராஞ்சி: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்டில் இந்தியாவின் மயங்க் அகர்வால், புஜாரா விரைவில் அவுட்டாகி ஏமாற்றினர்.இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலிரண்டு டெஸ்டில் வென்ற இந்திய அணி, 2-0 என, ஏற்கனவே தொடரை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட், ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இன்று துவங்கியது.இந்திய அணியில் இஷாந்த் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ஷபாஸ் நதீம் அறிமுகமானார். தென் ஆப்ரிக்க அணியில் மார்க்ரம், பிலாண்டர், டி புரூய்ன், முத்துசாமி, மஹராஜ் நீக்கப்பட்டு ஹம்சா, கிளாசன், லிண்டே, லுங்கிடி, பீட் சேர்க்கப்பட்டனர். 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, 'பேட்டிங்' தேர்வு செய்தார்.இந்திய அணிக்கு ரபாடா தொல்லை தந்தார். இவரது 'வேகத்தில்' மயங்க் அகர்வால் (10), புஜாரா (0) வெளியேறினர்.இந்திய அணி 12 ஓவரில், 2 விக்கெட்டுக்கு 25 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா (7), கேப்டன் கோஹ்லி (8) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் ரபாடா 2 விக்கெட் கைப்பற்றினார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD