ரோகித்திற்கு லட்சுமண் 'அட்வைஸ்'

Indian News

Indian News

Author 2019-09-29 05:10:36

img

புதுடில்லி: ''தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் துவக்க வீரராக களமிறங்கும் ரோகித் சர்மா, கவனமாக விளையாட வேண்டும்,'' என லட்சுமண் தெரிவித்தார்.

இந்திய ஒருநாள், 'டுவென்டி-20' அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா 32. ஒருநாள் அரங்கில் மூன்று இரட்டை சதம் அடித்த ஒரே வீரர். டெஸ்ட் என்றாலே 'அலர்ஜி' போல. இதுவரை 27 டெஸ்டில் மட்டும் பங்கேற்ற இவர், வரும் தென் ஆப்ரிக்க தொடரில் 'மிடில் ஆர்டருக்குப்' பதில் துவக்க வீரராக களமிறக்கப்பட உள்ளார்.

இதுகுறித்து இந்திய அணி முன்னாள் வீரர் லட்சுமண் 44, கூறியது:

தென் ஆப்ரிக்க தொடரில் துவக்க வீரராக களமிறங்க உள்ள ரோகித் சர்மாவுக்கு, அவரது அனுபவம் மிகப்பெரிய பலனைத் தரும்.

என் விஷயத்தில் இப்படி அமையவில்லை. 4 டெஸ்ட் விளையாடியதும், துவக்க வீரர் ஆனேன்.

ரோகித் அப்படியல்ல, 12 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார். முதிர்ச்சி, அனுபவம் அதிகம் உள்ளது, தவிர சிறந்த 'பார்மிலும்' உள்ளார். துவக்க வீரராக நான் செய்த தவறுகளை, இவர் செய்ய மாட்டார் என நம்புகிறேன். டெஸ்டில் துவக்க வீரராக எனக்கு கிடைத்த வாய்ப்பை வீணடித்தேன். இதே போல ரோகித்தும் தவறு செய்து விடக் கூடாது. தனது வழக்கமான 'ஸ்டைலில்' விளையாட வேண்டும்.

இவ்வாறு லட்சுமண் கூறினார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD