ரோகித் அரை சதம்

Indian News

Indian News

Author 2019-10-05 12:30:00

img

விசாகப்பட்டனம்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய வீரர் ரோகித் சர்மா அரை சதம் கடந்தார். இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஆந்திராவின் விசாகப்பட்டனத்தில் நடக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 502/7 (டிக்ளேர்) ரன்கள் எடுத்தது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 385 ரன்கள் எடுத்திருந்தது. முத்துசாமி (12), மஹாராஜ் (3) அவுட்டாகாமல் இருந்தனர். அஷ்வின் அசத்தல்இன்று நான்காம் நாள் ஆட்டம் நடக்கிறது. முத்துசாமி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பவுலர்களுக்கு நெருக்கடி தந்தார். இருப்பினும், அஷ்வின் 'சுழலில்' மஹாராஜ் (9), ரபாடா (15) சிக்கினர். தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 431 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முத்துசாமி (33) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் அதிகபட்சமாக அஷ்வின் 7 விக்கெட் வீழ்த்தினார்.

இதனையடுத்து, 71 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. மயங்க் அகர்வால் (7) ஏமாற்றினார். ரோகித் சர்மா, புஜாரா ஜோடி சிறப்பாக விளையாடியது. ரோகித் அரை சதம் எட்டினார். உணவு இடைவேளைக்குப்பின், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 82 ரன்கள் எடுத்து, 153 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. ரோகித் (50), புஜாரா (24) அவுட்டாகாமல் இருந்தனர்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD