ரோகித்-ரகானே '185'

Indian News

Indian News

Author 2019-10-20 02:40:58

img

ராஞ்சி: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்டில் இந்தியாவின் ரோகித் சர்மா, ரகானே ஜோடி 4வது விக்கெட்டுக்கு 185 ரன்கள் சேர்த்து அவுட்டாகாமல் உள்ளது.

இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் ராஞ்சியில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் மயங்க் அகர்வால் (10), புஜாரா (0), கேப்டன் கோஹ்லி (12) ஏமாற்றினர். பின் இணைந்த ரோகித் சர்மா, அஜின்கியா ரகானே ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. இந்த ஜோடி 185 ரன்கள் சேர்த்து அவுட்டாகாமல் உள்ளது. இதன்மூலம் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்டில், 4வது விக்கெட்டுக்கு அதிக ரன் சேர்த்த இந்திய ஜோடியானது. இதற்கு முன், சமீபத்தில் புனேயில் நடந்த 2வது டெஸ்டில் இந்தியாவின் கோஹ்லி - ரகானே ஜோடி 4வது விக்கெட்டுக்கு 178 ரன் சேர்த்திருந்தது அதிகபட்சமாக இருந்தது.

இத்தொடரில் ரோகித் சர்மா 3 (176, 127, 117*), மயங்க் அகர்வால் 2 (215, 108) சதமடித்துள்ளனர். இதன்மூலம் ஒரு டெஸ்ட் தொடரில் இந்திய துவக்க வீரர்கள் முதன்முறையாக 5 சதமடித்துள்ளனர். இதற்கு முன், 3 தொடர்களில் (எதிர்: விண்டீஸ், 1970-71, 1978-79 மற்றும் எதிர்: இலங்கை, 2009-10) இந்திய துவக்க வீரர்கள் தலா 4 சதமடித்திருந்தனர்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD